நேற்று பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலை, பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்பவர் மீது சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த அதிமுக பேனர் விழுந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து கேட்டபோது. சாலையோரத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டு இருந்த பேனர் கவிழ்ந்து விழுந்ததில் உயிரிழந்தார் அவரது குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அந்த குடும்பத்திற்கு குறைந்தபட்ச 50 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காதவாறு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக பேனரை ரத்து செய்ய வேண்டும்.பேனரில் வாழ்ந்தால் மட்டும் மக்கள் மனதில் வாழ்ந்து விட முடியாது. இதனை அனைத்து அரசியல்வாதிகளும் கருத்தில் கொண்டு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்..
காவிரியில் கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும்...அதற்கு ஆறுகளை முறையாக தூர்வார வேண்டும்..காவிரி ஆற்றில் உபரி நீரை வீணாக்காமல் நிறைய தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதன் மூலம் வறட்சியான மாவட்டங்களுக்கும் காவிரி நீரை கொண்டு செல்ல வேண்டும் .இதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
லட்சக்கணக்கில் நஷ்டங்களை சந்தித்த விவசாயிகளுக்கு வெறும் ஆயிரங்களைக் கொடுத்து சரி பண்ண முடியாது .விவசாய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் வட்டியில்லா விவசாய கடன் வழங்க வேண்டும்.என இவ்வாறு கூறினார்