வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=GaiX4bsUWsQ&feature=youtu.be
தூத்துக்குடியில் இன்று உப்பள தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மழைக்கால நிவாரணம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து உப்பள தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் உப்பள தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மழைக்கால நிவாரணம் குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார், நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றி தருவோம் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார் என்ற அவர்.
உப்பளங்களில் பணிபுரியும் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் எனவே மத்திய அரசு உப்பள தொழிலை கார்ப்பரேட் நிறுவனம் போல் நடத்தாமல் இங்கு இருக்ககூடிய மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு சொசைட்டி போல் பயன்பெறும் வகையில் உருமாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் எடுத்துகூறி கொண்டுவர முயற்ச்சிப்போம். தமிழக அரசு இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முடித்து இருக்கின்றார்கள் அதனுடைய பயன் என்னவென்று சொல்லவில்லை முதலில் அதை சொல்லட்டும் அதன்பிறகு முதல்வர் வெளிநாட்டு பயணத்தின் பயன் என்னவென்று சொல்லட்டும்" என்று அவர் தெரிவித்தார். பின்னர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலையருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார், இந்நிகழ்ச்சியில் அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் N.P. ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் ஆறுமுகம், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், வழக்கறிஞர் ஆனந்த கபேரியல், உட்பட பலர் கலந்து கொண்டனர்