இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது நடிகர் ரஜினிகாந்த் கருத்து மட்டுமல்ல ஓட்டுமொத்த தமிழகத்தின் குரல் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ


இந்தி மொழி தொடர்பான பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே குரலாக இந்தி திணிப்பு என்பது காலம் காலமாக தமிழத்திலே இருக்க கூடாது என்பது அனைவரின் கொள்கை என்றும், தமிழ் மொழிக்கு இந்த அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தீடீரென ஆய்வு மேற்க்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபர்வர்களிடம் நலம் விசாரித்தார், அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில்:-


இந்தி மொழி தொடர்பான பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே குரலாக இந்தி திணிப்பு என்பது காலம் காலமாக தமிழத்திலே இருக்க கூடாது என்பது அனைவரின் கொள்கை என்றும்,பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து இந்தி எதிர்ப்பு என்பது இயக்கமாக தோற்றுவிக்கப்பட்டது.இன்று வரை இருமொழிக்கொள்கை தான் அதிமுகவின் கொள்கை என்றும்,இந்தி திணிப்பு என்பது எந்த காலத்திலும் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது,


இந்தி படிக்க வேண்டும் என்று அமிதஷா சொல்லி இருக்கிறார். அது அவர்கள்(இந்தி) பேசுகின்ற மாநிலத்தில் இதை சொல்லி உள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்களை தமிழில் பெற்று தந்தது அதிமுக அரசு தான் என்றும், ரெயில்வே துறை தேர்வுகள் தமிழகத்தில் தமிழில் தான் நடத்த வேண்டும் என்ற உத்தரவினை பெற்று தந்துள்ளோம்,தமிழ் மொழிக்கு இந்த அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.


Previous Post Next Post