தாம்பரத்தில் முத்தலாக் தடை சட்ட விளக்க பொதுக்கூட்டம்

சென்னை அடுத்த தாம்பரத்தில், காஞ்சி மேற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், முத்தலாக் தடை சட்ட விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அல்அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில பொதுச்செயலாளர் முஹம்மத், மாநில செயலாளர் அப்துல்கரீம், மாவட்ட செயலாளர் அசார், மாவட்ட துணைச்செயலாளர் சல்மான், தாம்பரம் நிர்வாகிகள் சாதிக், சிக்கந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்டத்தை கண்டித்தும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை (370 வது பிரிவு)ரத்து செய்ததை கண்டித்தும், மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நடைபெற்ற இக்கண்டண பொதுக்கூட்டத்தின் வாயிலாக, இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிப்பதில்லை, மனித நேயத்தை வளர்க்கும் விதத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக இஸ்லாமிய பிரச்சாரங்கள் இருக்கும் என்று  தெரிவிக்கப்பட்டது. இதில் மகளிர் உட்பட பெருந்திரளான இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


Previous Post Next Post