தூத்துக்குடி காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 27 பேருக்கு S.P. அருண் பாலகோபாலன் வெகுமதி வழங்கி பாராட்டு. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்டரங்கில் இன்று காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் மற்;றும் பல்வேறு அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார்.
கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 9 எதிரிகளை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் அய்யப்பன் குண்டர் சட்டத்தில் கைது செய்தமைக்காகவும், அதே போன்று 4 எதிரிகளை ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் குண்டர் சட்டத்தில் கைது செய்தமைக்காகவும், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார், காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம் மற்றும் ராஜேஸ்குமார்ஆகியோர் கஞ்சா வியாபாரிகள் முருகன், ஜான்சன் ஜெபசிங் மற்றும் மரியான் ஆகியோரை கைது செய்து 3¾ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தமைக்காகவும், மத்தியபாகம் உதவி ஆய்வாளர் ஊர்காவல் பெருமாள் மாதாகோவில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மூலம், பெற்றோர்கள் தவறவிட்ட குழந்தைகள், பொதுமக்கள் தவறவிட்ட நகைகள், செல்போன் மற்றும் இதர பொருட்களை உரியவர்களிடம் பாதுகாப்பான முறையில் ஒப்படைத்து, பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்தமைக்காகவும், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் ஒப்படைத்தமைக்காகவும், மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சரவண சங்கர், முதல் நிலை காவலர் காசி விஸ்வநாதன் ஆகியோர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குகளில் திறம்பட செயல்பட்டு எதிரிகளை கைது செய்வதற்கு உதவியமைக்காகவும்,
பெண் தலைமை காவலர்கள் வடபாகம் காவல் நிலைய மகாலெட்சுமி, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய முருகஜோதி, சுபத்ரா, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய கல்பனா மற்றும் தட்டப்பாறை தலைமை காவலர் மாரியப்பன் ஆகியோர் நீதிமன்ற அலுவல்கள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காகவும்,மேலும் மாவட்ட குற்ற ஆவண காப்பக முதல் நிலை காவலர் சுரேஷ், ஆழ்வார்திருநகரி காவலர் ராஜேஷ்குமார், சிப்காட் தலைமை காவலர் ஜேசுராஜ், செய்துங்கநல்லூர் முதல் நிலை காவலர் பால்சிங், ஆயுதப்படை முதல் நிலை காவலர் முருகப்பெருமாள், காவலர்கள் ஸ்டீபன்சன், செல்வி பாலா மற்றும் அஜித் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மேற்கூறப்பட்டுள்ள அனைவரைவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பாராட்டி வெகுமதி வழங்கினார். இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் பிரகாஷ், தூத்துக்குடி ஊரகம் முத்தமிழ், ஸ்ரீவைகுண்டம் சுரேஷ்குமார், சாத்தான்குளம் பால்துரை, விளாத்திக்கும் ஜெயக்குமார், மணியாச்சி ஜெயச்சந்திரன், கோவிலபட்டி ஜெபராஜ், மாவட்ட குற்றப்பிரிவு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், நில மோசடி தடுப்பு பிரிவு பிரதாபன், மாவட்ட தனிப்பரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.