திருச்செந்தூர் அருகே 294 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாரை S.P. அருண் பாலகோபாலன் பாராட்டினார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அதிகாலை 3 மணிக்கு ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், தலைமை காவலர் ராஜகுமார் காவலர்கள் சோமசுந்தம் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் ஆத்தூரிலிருந்து சேர்ந்த பூமங்கலம் ரோட்டில் வி.வி மினரல் கம்பெனி அருகில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்
அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் 180 மில்லி அளவு கொண்ட காலி குவார்ட்டர் பாட்டில்களை பிளாஸ்டிக் டிரேயில் வைத்து ஏற்றிக் கொண்டு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த TN 04 AK 4762 TATA ACE வாகனத்தை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர்.
இதில் குவார்ட்டர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள டிரேகளுக்கு நடுவில் பச்சைக் கலர் 10 எண்ணம் பாலிதீன் கவர் மூட்டைகள் இருந்ததை கவனித்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்துப்பார்த்ததில் ஒவ்வொன்றிலும் 10க்கும் மேற்பட்ட காக்கி டேப் சுற்றப்பட்ட பொட்டலங்கள் இருந்தது, அதை பிரித்துப் பார்த்ததில் விதைகளுடன் கூடிய பச்சை நிற காய்ந்த இலைகள் உள்ள கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது, இது தொடர்பாக அங்கு விரைந்த திருச்செந்துர் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் கஞ்சா கடத்தியவரை கைது செய்ய உத்தரவிட்டதோடு கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இந்தக் கஞ்சாவின் எடை மொத்தம் 294 கிலோ இவற்றின் மதிப்பு ரூபாய் 29 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். மேற்படி கஞ்சாவையும் கஞ்சாவை கடத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் வாகனம் ஓட்டி வந்த ஆத்தூர் யாதவர் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடாச்சலம் என்ற வெங்கடேசனை கைது செய்து ஆத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர், ஆத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இச்சம்பவத்தில் திறம்பட செயல்பட்டு கஞ்சா கடத்தலை தடுத்த திருச்செந்தூர் DSP பாரத், ஆத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், தலைமை காவலர் ராஜகுமார் காவலர்கள் சோமசுந்தம் மற்றும் பாக்கியராஜ் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் வெகுவாக பாராட்டினார்