கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். முகாமில் பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆறு. சந்தோஷ் அமைப்புசாரா தொ.வி.மு இணைச் செயலாளர் விசிக தலைமையில் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டது பெருமுளை கிராமத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக 2002ஆம் ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் தொட்டி 17 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது சரி செய்து தர வேண்டும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் கிராம தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் மயான பாதையை சரி செய்து தர வேண்டும் ஊராட்சியில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ள நூலகத்தை உடனே திறக்க வேண்டும் சமுதாய நலக்கூடம் அமைத்து தரவேண்டும் அரசு வழங்கும் சலுகைகள் இதுவரையில் எங்கள் கிராம மக்களுக்கு வழங்கவில்லை அதனை கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் 100 நாள் வேலை திட்டம் முறையாக கிடைக்க உறுதிப்படுத்த வேண்டும் பொது கழிப்பறை அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆறு சந்தோஷ் தலைமையில் ஊர் பொதுமக்கள் மனு அளித்தார்கள். இதில் திட்டக்குடி வருவாய் ஆய்வாளர் குமரன், விஏஒ ரவிக்குமார், கிராம உதவியாளர் விஜயகுமார், அங்கன்வாடி பணியாளர் பச்சையம்மாள், சத்துணவு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.