சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி முன்னாள் மத்திய நிதியமைச்சர் அவர்கள் கைது செய்யப்பட்ட விதம் மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது தெளிவாக தெரிகிறது, டெல்லியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் 7 மாதங்களாக நிலுவையில் இருந்த வழக்கு இரண்டு தினங்களுக்கு பிறகு ஓய்வு பெறப்படுகின்ற நீதிபதி அவர்கள் அவருக்கு கொடுக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யப்பட்ட பிறகு இரண்டு மணி நேரத்தில் அமலாக்கப்பிரிவு துறையினர், புலனாய்வு துறையினர் சிதம்பரம் வீட்டுக்குச் சென்று அவரை விசாரணை செய்ய இருக்கிறோம் என்ற போர்வையில் அவரை சந்திக்க முயன்றிருக்கிறார்கள் அப்போது அவர் வீட்டில் இல்லை, ஆனாலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்கள் அங்கே சென்று இருக்கிறார்கள் புலனாய்வுத்துறையும், மற்றும் அமலாக்கப்பிரிவு துறையும் சிதம்பரம் அவர்களின் வழக்கில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன ஏழு மாதங்களாக தொடர்ந்து புலனாய்வுத்துறையும், அமலாக்கபிரிவு துறையும் வருவாய்துறையும் அவரை அழைத்து விசாரணை செய்து இருக்கிறார்கள், சிதம்பரம் அவர்கள் துறையின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் 5 மணி நேரத்திற்கு மேலாக பதில் கொடுத்து இருக்கிறார்கள், மேலும் விசாரணைக்கு அழைத்த போதெல்லாம் சென்று இருக்கிறார், விசாணைக்கு ஒத்துழைக்கிறேன், வெளிநாடு செல்லமாட்டேன் என்று சொன்னால் நீதிமன்றத்தில் முன் ஜாமின் வழங்கவேண்டும், முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சிதம்பரம் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் அவர் மீது கைது நடவடிக்கை என்பது அது அரசியல் காழ்ப்புனர்ச்சியையும், உள்நோக்கத்தையும் காட்டுகிறது, அவர்கள் நேரிடையாக அவரது வீட்டுக்கு சென்று அவரை கைது செய்து அழைத்து சென்றனர், அதன்பிறகு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் 4 நாள் நீதிமன்ற காவல் வைக்கப்பட்டு உள்ளது, அவர் என்ன பொருளாதார குற்றம் செய்துவிட்டாரா, அவர் மீது என்ன குற்றம் என்பதை நிறுபிக்கவேண்டும், எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றவாளியான இந்திராணி முகர்ஜி சொன்ன வாத்த்தை வைத்து அவரை கைது செய்தது என்பது விந்தையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது, திரு.சிதம்பரம் அவர்கள் மத்திய அரசை எதிர்த்தும் பொருளாதார வீழ்ச்சியை குறித்தும் டிவிட்டரில் பதிவு செய்துவருவதும், பத்திரிகையில் எழுதுவதும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, ஆகவே அவரை பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது, காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது, குறிப்பாக அதிகார துஷ்பிரியோகம் செய்வது என்பதை யாராளும் ஏற்றுக்கொள்ள முடியாது, தங்களிடம் மிருகபலம் இருக்கிறது என்பதால் காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவரை ஒடுக்க நினைப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வருகிறது, நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன், சிதம்பரம் அவர்களை கைது செய்தது அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகண்டனம் போல் தெரிகிறது, கொலை குற்றவாளி கொடுத்த வாக்குமூலம்படி அவரை கைது செய்யப்படுவதை ஜனநாயகத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது, புதுச்சேரி அரசின் நடவடிக்கையில் ஆளுனர் தலையிடகூடாது என்ற நீதிமன்றத்தில் கூறியதை குறித்து கேட்டபோது நீதிமன்றம் 1000 முறை சொன்னாலும் பாண்டிச்சேரி கவர்னர் கேட்கமாட்டார்கள் என்று பேசினார்