திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஹெல்ப்லைன் அதிகாரிகள் முன்னிலையில் போக்சோ சட்டம் பற்றியும் பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் பற்றியும் குழந்தை திருமணம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் காவல்துறை அதிகாரிகள் ,ஆசிரியர்கள் மற்றும் 500கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறு வயது பெண்கள் ,பெண் குழந்தைகள் போன்றவர்கள் பாலியல் சீண்டல்களில் இருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது என்பதையும் ,பாலியல் சீண்டல்கள் நடந்தால் அதை நாம் எப்படி எதிர்கொள்வது என்பதையும் போக்சோ சட்டத்தில் விதி முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இளம் வயதில் திருமணம் செய்வது பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. மாணவிகள் அனைவரும் சமுதாயத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறப்பட்டது.மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலக அலுவலர் சரஸ்வதி, பழனி மகளிர் காவல்துறை ஆய்வாளர்,ஈஸ்வரி,மற்றும்,காவலர்கள் கலந்து கொண்டு அறிவுறைகளை வழஙகினார்கள்.