சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தேர் வடக்கு வீதியில் உள்ள விஜய் சுபம்
பெனிபிட் பண்ட் லிட்டின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா விஜய் சுபம் பெனிபிட் பண்ட்
லிட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர்
பி.கியான்சந்த் ஜெயின் அவர்களின் பிறந்த நாள் விழா சீர்காழி சுபம் வித்யா
மந்திர் ஜெயின் சங்கம் பாரதிய ஜெயின் சங்கடன்னா (பி.ஜெ.எஸ்) மற்றும் சீர்காழி
லயன்ஸ் கிளப் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஆகிய முப்பெரும் விழா சீர்காழி ஸ்ரீசுபம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கண் பரிசோதனை முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். கண்புரை உள்ள நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு சீர்காழியிலிருந்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அவர்களுக்கு லென்ஸ் மருந்து
தங்கும் வசதி உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாக செய்யப்பட்டது. 40 வயதிற்கு
மேல் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் கண்டறிதல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட்
லிட்டின் நிர்வாக இயக்குனர் மற்றும் லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர்
பி.கியான்சந்த் ஜெயின் சுபம் வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் ஜி.சுதேஷ்
அனைத்து இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பி.ஆர்.ஓ மற்றும் மாவட்ட
லயன்ஸ் சங்க தலைவர் சீர்காழி சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகி எஸ்.சக்தி வீரன்
சீர்காழி லயன்ஸ் சங்க தலைவர் இன்ஜினியர் கே.யுவராஜ்குமார் செயலாளர் இன்ஜினியர்
எம்.சுரேஷ் நிர்வாக அலுவலர் எஸ்.நிர்மல்குமார் பொருளாளர் எஸ்.சுரேஷ் மாவட்ட
லயன்ஸ் சங்க இரத்த தான முகாம் தலைவர் ஹாஜி எம்.ஹலிக்குல் ஜமான் லயன்ஸ் சங்க நிர்வாகி
வழக்கறிஞர் பாஸ்கரன் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் சீர்காழி
நகர செயலாளர் எம்.அன்வர் சுல்தான் ச.மு.இ மேல்நிலைபள்ளியின் ஓய்வு பெற்ற
உடற்கல்வி ஆசிரியர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்ற ஆசிரியர் வி.ஜெயராமன்
கண் சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜெ.பரமசிவம் திருஞானசம்பந்தம் மற்றும்
சீர்காழி லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஜெயின் சங்க உறுப்பினர்கள் சீர்காழி
விஜய் சுபம் பெனிபிட்பண்ட் லிட் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.