காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை பல்லாவரம் பாத்திமா மஞ்சில் தெருவில், தனியார் பள்ளிக்கு அருகில் இரு வடமாநில வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.
வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=ILUrc3_1W0c&feature=youtu.be
அந்த வாலிபர்கள் பொது இடத்திலேயே இருமல் மருந்து மூலம் போதை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அவர்கள் கையில் ஒரு மர்ம பொட்டலம் இருந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்தது 3 கிலோ கஞ்சா பொட்டலம் என தெரியவந்தது. அதிர்ச்சி யடைந்த அப்பகுதி மக்கள் வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்து பல்லாவரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மூன்று கிலோ கஞ்சாவை விற்க முயன்றது தெரியவந்ததும், அந்த வாலிபர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த கரிம் சேக் மற்றும் பாஃபி என தெரியவந்தது. இதனையடுத்து பல்லாவரம் காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு அருகிலேயே வடமாநில வாலிபர்கள் 3 கிலோ கஞ்சா மற்றும் போதையேற்ற பயன்படுத்தும் இருமல் மருந்து ஆகியவற்றை வைத்திருந்து சிக்கியதால் அது பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது கடத்தல் கும்பலுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்டதா என்று போலீசார் விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.