ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் பொன் விழா நிகழ்ச்சிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை புரிந்தவர்களை வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலா ளர் எஸ்.டி.சந்திரசேகர் வரவேற்றார். இவ்விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் . வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எஸ்.எஸ். கந்தசாமி,ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். கல்லூரியின் அறிக்கையை வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர், முனைவர் என்.மரகதம்வாசித்தார்.
அனைவரின் கைகளிலும் தமிழ் அஞ்சல் நாளிதழ்
இதனை தொடர்ந்து இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி. கருப்பண்ணன், கே.பி. அன்பழகன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர்கள் இராமலிங்கம், தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், சிவசுப்ரமணியம் . ராஜாகிருஷ்ணன் . ஈஸ்வரன் . ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர் . முன்னதாக இவ்விழாவில் வேளாளர் கல்வி அறக்கட்டளையின் சார்பில் புதிதாய் கட்டப்பட்ட கலை அறிவியல் கல்லூரிக்கான புதிதாக கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும், வேளாளர் கல்வி அறக்கட்டளையின் பொன் விழா ஆண்டின் நினைவு கல்வெட்டுகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து பேசியதாவது ,2011 ம் ஆண்டு வரை தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் 31 % சதவீதம் இருந்தாகவும் , தற்போது கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிய காரணத்தால் தமிழகத்தில் உயர்கல்வி படிக கும் மாணவர்கள் சதவீதம் 48.6 % இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் பெண் பத்திரிக்கை நடத்தியவர் திருமதி கமலாசத்திய நாதனைப் போன்று மாணவிகள் திகழ வேண்டும். மாணவர்கள் பெற்றோர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்றும் , சமுதாய பொறுப்பும் மாணவர்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி நீர்வளத்தை மேம்படுத்துவது குறித்து மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழ் அஞ்சல் நாளிதழ் படிக்கும் கட்சி
மாநில சாலைகளை தேசிய சாலைகளாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். பவானியில் ஜம்பை அருகே பவானி ஆற்றில் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படும் என்றார். மேட்ப்பாளையத்திலிருந்து - பவானி வரை 98 கி.மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை கள் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகவும் , 300 கோடி திட்ட மதிப்பீட்டில் ஐந்தரை கிலோ மீட்டர் அளவில் திண்டல் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டி கொடுக்கப்படும் என்றும் , மாநிலச்சாலையான பவானியில் இருந்து தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையாக்கப்படும் என்றும் , 84.5. கோடி திட்ட மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் பல்நோக்குப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பெண் பிள்ளைகள் மிகுந்த கவனத்தோடு தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் அலை பாய்கின்ற வயதில் சரியான தேர்வை நீங்கள் எடுக்க வேண்டும் தேர்ச்சி சதவிகிதத்தில் பெண்கள் தான் முதலிடம் நீங்கள் நல்ல முறையாக வளர்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் சிறந்து திகழ வேண்டும் என்றார்.விழா முடிவில் வேளாளர் கல்வி அறக்கட்டளை பொருளாளர் பி.கே.பி.அருண் கூறினார்.