பொதுமக்களின் அடிப்படை தேவைகள் கூட்டுறவு சங்கங்களால் நிவர்த்தி செய்யப் படுகிறது. பெட்ரோல் பங்க் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டபேரவைத்தலைவர் ப.தனபால் பேச்சு.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட், கீழ் காசிகவுண்டன்புதூர் பகுதியில் அமைக்ப் பட்டுள்ள ஏ.சி.எம்.எஸ்.கூட்டுறவு பெட்ரோல் பங்க் துவக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் கலந்து கொண்டு புதிய பெட்ரோல் பங்க்கினை துவக்கி வைத்து பேசுகையில் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார்கள். அம்மா அவர்களின் நல்வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் கிராமப்புற பொது மக்களும் பயன்பெறும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் கடனுதவிகள் உட்பட என்னற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக விவசாய கடன், நகைக்கடன், பொது விநியோகத்திட்டம், மருந்தக விற்பனை உட்பட பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுவு விற்பனைச்சங்கத்தின் மூலமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏ.சி.எம்.எஸ். கூட்டுறவு பெட்ரோல் பங்க் காசி கவுடண்புதூர் பகுதியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் ப.தனபால் அவர்கள் பேசினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு துணைப்பதிவாளர் நர்மதா அவிநாசி வேளாண்மை உற்பத்தியார்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தலைவர் சுப்பிரமணியம் கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சரவனக்குமார் பொது மேலாளர் சண்முகம் இந்தியன் ஆயில் கார்ப்பரரேசன் ( திருப்பூர்) மேலாளர் லேட்டா ராஜா மீரா அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.