பழனியில் கடந்த சிலமாதங்களாகவே தொடர்ந்து,வாடகை கார் முதலாளிகளும்,கார் ஒட்டுனர்களும்,சொந்த கார்( own board) வைத்திருப்பவர்களுகும் பிரச்சனை இருந்த வண்ணம் உள்ளது. சில வாடகை கார் ஓட்டும் ஓட்டுனர்கள் சொந்தக்காரில் வருவோர்களை, வழியில் தடுத்து, தகாத வார்த்தைகளில் பேசியும்,மிரட்டியும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தனர். யாராவது நண்பர்களுடைய காரை வாங்கி வந்தால் கூட அவர்களை தடுத்து நிறுத்தி நீங்கள் இதில் செல்லக்கூடாது, வாடகை வண்டியில் (T.board) தான் செல்ல வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.சென்ற மாதம் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் பழனி முருகனை தரிசிக்க இரயிலில் பழனிக்கு வருகை புரிந்துள்ளார். தரிசனம் செய்துவிட்டு தன் குடும்பத்துடன் காரில் திரும்பி சென்று கொண்டிருந்த பொழுது அந்த வாகனத்தையே ஒட்டுனர்கள் வழிமறித்து வண்டியை எடுக்க விடாமல் தகராறு செய்துள்ளனர் .சிறிது நேரம் சர்ச்சை ஏற்பட்டது 100 க்கும் மேற் பட்ட பொதுமக்கள் கூடி வாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறை வந்து கூட்டத்தைகலைத்து விட்டு, தேவஸ்தான வாகனத்தை வர வைத்து பின் ஆணையரை அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, காரை வழிமறித்தவர்களுக்கு எந்த தண்டனையும் கொடுக்கப் பட வில்லை வழக்குபதிவும் செய்யவில்லை. நீங்கள் ஏன் இப்படி வாகனத்தை தடுக்கிறிர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்டதிற்கு, அவர்கள் எங்களுக்கு அதிகாரம் கொடுத்தது ஆர்.டி.ஓ தான் என்று கூறுகிறார்கள். அதனால் அனைத்து அதிகாரகளும் கண்டும் காணாமல் சென்று விட்டனர். இந்து சமய நிலையத்துறை கூடுதல் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன நியாயம் கிடைக்கும் என்றும் மக்கள் கருதுகின்றனர். இதனால் சொந்தமாக கார் வைத்திருக்கும், உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும் ,தினமும் இதுபோன்ற சம்பவங்கள் பழனியில் தொடர்ந்து நடைபெறுவதால். ஆங்காங்கே பதற்றம் நிலவுகிறது. சிலர் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது கூட இவர்களால் தடுக்கப்படுகிறோம் என்று புலம்புகின்றார்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஆர்டிஓ மற்றும் காவல்துறையும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.