நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். அவரின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்ததே இல்லை- சதானந்த கௌடா மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கௌடா பேட்டி: சிபெட்டில் மாணவர் விடுதியை திறந்து வைக்க வந்துள்ளேன். இது 91 அறைகள் கொண்ட மிகப்பெரிய விடுதி, 950 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை குறித்து நான் இப்போது அதிகம் பேசி வருகிறோம். சிப்பெட் இளைஞர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை பெற்று தந்துள்ளது. இதுவரை 3.5 லட்சம் இளைஞர்கள் இதில் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பிரதமரின் எண்ணமும் இது தான். அக்டோபர் 2 ஆம் தேதி நாட்டில் உள்ள அனைத்து சிபெட் நிறுவனமும் ஒவ்வொரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதனை அழிக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
ரிசர்வ் வங்கி விவகாரம் குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கு பதில்- அனைத்து மஞ்சளாக தெரியும் கண்களோடு அவர் அதனை பார்க்கக்கூடாது. இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடு என உலக வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை விட வேகமாக இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது. ஒரு புறம் வங்கிகள் கடன் தர மறுப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டுகிறார் மறுபுறம் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதையும் குறை சொல்கிறார். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். அவரின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்ததே இல்லை.