சென்னை விமான நிலைய உள்நாட்டு வருகை பகுதியில் கட்டண கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளது. அந்த கழிப்பறையை சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுமார் பத்து நாட்களாக கழிப்பறையில் இருந்து வெளியாகும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கிக் காணப்படுகிறது. தேங்கியிருக்கும் கழிவுநீரில் ஆயிரக்கான கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றது. இதனால் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும், விமான நிலைய முழுவதும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நிர்வாகத்தை குற்றம் சாட்டி வருகின்றார்கள். விமான நிலையத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பலமுறை விமான நிலைய அதிகாரியிடம் கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாகவும் இதனால் துர்நாற்றம் வீசி வருவதாகவும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர்..