ரூ.15.95 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திருப்புர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 88 பயனாளிகளுக்கு ரூ.15.95 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 360 மனுக்களை பெற்றுக் கொண்டு மனுதாரார்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினர். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 1 பயனாளிக்கு ரூ.4,000 மதிப்பில் காதொலிக்கருவியினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம், ஊத்துக்குளி, காங்கயம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய வட்டங்கனைச் சேர்ந்த 18 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 மதிப்பில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினையும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் 2பயனாளிகளுக்கு ரூ.8846 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) தொழிலாளர்த் துறையின் மூலம் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நல வாரியத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.41,000 மதிப்பில் திருமண உதவித் தொகையினையும், 15 பயனாளிகளுக்கு ரூ.3,27,000 மதிப்பில் இயற்கை மரண நிவாரண உதவித்தொகையினையும் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.6,000 மதிப்பில் மகப்பேறு நிதி உதவித்தொகையினையும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி, 42 குழந்தைகளுக்கு ரூ.9,84,000 மதிப்பிலான நிதி ஆதரவு வழங்குவதற்கான ஆணையினையும் என 88 பயனாளிகளுக்கு ரூ.15,95,692 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார்,
சமூகபாதுகாப்புத்திட்ட தணித்துணை ஆட்சியர் விமல்ராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகமது யூனுஸ், தொழிலாளர் உதவி ஆணையர் பிரேமா, துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post