இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் சிதம்பரம் தமிழகத்தின் தாழ்மை நிலைக்கு அதிமுக அமைச்சர்கள் தான் காரணம் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.
சிதம்பரம் வழக்கில் கபில்சிபில் சிறப்பாக வாதாடினார். அரசு ஒரு வழக்கை எப்படி எல்லாம் ஜோடித்து உள்ளனர். எப்.ஐ.ஆரில் இல்லாத பெயர் கொண்டவரிடம் சி.பி.ஐ. கேள்விகளை தயார் செய்யாமலே கைது செய்ய முயற்சிகின்றனர். அமலாக்கதுறை கைது செய்யாமல் இருக்க ஜாமீன் வழங்கி உள்ளது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும்.
இந்த விவகாரத்தில் திமுக மவுனம் காக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் அழகாக முறையில் சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் தொண்டன் பேசுவது போல் திமுகவும் பேசமுடியுமா. திமுக-காங்கிரஸ் இடையே நல்ல புரிதல் உள்ளது. திமுக-காங்கிரஸ் நட்பே நேர்மையானது. இதில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை. தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். கட்சியில் தற்போது ஒற்றுமை மற்றும் எழுச்சி எழுந்து உள்ளது. தமிழகத்திற்கு யார் அவமானம், தலைக் குணிவு என்று உலகத்திற்கே தெரியும். அதிமுக அமைச்சர்கள் போல் பொது வாழ்க்கையில் தாழ்மையடைந்தவர்கள் வேறும் கிடையாது. சி.பி.ஐ. விசாரணைக்கும் வழக்கிற்கும் உட்பட்டு ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள். இவர்கள் மற்றவர்களை குறை சொல்வது தவறான விசயம். இந்தியாவில் 9 சதவீத வளர்ச்சியை காட்டியவர் சிதம்பரம். மாணவர்களுக்கு கல்விகடன் வழங்கியவர். இந்தியாவில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தவர். இந்தியாவில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியவர். சிதம்பரம் எப்போதும் பெருமைக்குரியவராக தான் இருந்து உள்ளார். குற்றச்சாட்டு சொல்வதால் குற்றவாளியாக முடியாது. சிதம்பரம் குறி வைக்கப்படுகிறார். அமீத்ஷா, பா.ஜ.க.வின் தவறான கொள்கைகளை பேராண்மையுடன் அரசுக்கு எதிராக பேசுவதால் குறி வைக்கப்படுகிறார். மற்ற கட்சிகள் அடிமையாக இருக்க வேண்டும். எதிராக பேசினால் குற்றச்சாட்டுகளை சொல்ல வேண்டும். அடக்குமுறையை ஏவி விட வேண்டும் என்று மோடி அரசு விரும்புகிறது. சர்வாதிகாரிகள் அப்படி தான் நடந்து கொண்டு உள்ளனர். சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக உள்ளது. எல்லா விதமான குற்றங்களையும் தவிடு பொடியாக்குவோம். சி.பி.ஐ., அமலாக்கதுறை குற்றம் சாட்டுவதாலே உண்மையாகி விடாது. சி.பி.ஐ., அமலாக்கதுறை எத்தனை குற்றங்களை சொல்லி நிரூபித்து உள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் வெளிநாட்டு மூலதனத்தை பெற்று வருவது அமைச்சரின் முடிவு அல்ல. 6 தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு, ரிசர்வ் வங்கி கவர்னரும் இருப்பார். அந்த உயர்ந்த குழு அங்கீகரித்ததை நிதியமைச்சர் கையெழுத்து போட்டு உள்ளார். இதனால் எப்.ஐ.ஆரில் நிதியமைச்சரை சேர்த்தால் அரசு அதிகாரிகள் குழுவை சேர்க்க வேண்டும். இதனால் வழக்கு நிற்காமல் போய்விடும். இந்த பா.ஜ.க. நடத்தாது. சிதம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்து அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும். இதன் முலம் காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டும். சட்டரீதியாக எந்த தவறும் கிடையாது. ஒவ்வொரு கோப்புகளில் குறை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். அரசு முற்றிலும் தவறான நிலையை எடுத்து உள்ளது. இது தர்மத்திற்கும் நீதிக்கும் புறம்பானது. இது வெற்றி பெறாது. பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு முடிவுகளில் 99 பேர் வெற்றி பெறவில்லை என்பது தேசத்திற்கு பின்னடைவு. தரமான ஆசிரியர்களை உருவாக்கினால் தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர்களை தரமானவர்களாக உருவாக்க பயிற்சியை அரசு அதிகப்படுத்த வேண்டும். சமுதாயத்தின் எதிர்காலம் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களே வெற்றி பெறவில்லை என்றால் மாணவர்களின் நிலை என்னாகும். இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழக போலீசார் திறமையானவர்கள். தீவிரவாதிகள் நுழைந்தால் அதை கட்டுபடுத்துவார்கள்.