புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை குளத்தூரில், ஆறு கார்கள் தாறுமாறாக ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 6 பேர் பலியானார்கள். ஒரு காரின் டயர் வெடித்ததால் இந்த பரிதாப சம்பவம் நடந் தேறி உள்ளது.
வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=hD4hFNLcPCI&feature=youtu.be
புதுக்கோட்டையில் இருந்து மார்த்தாமலைக்கு செல்லும் வழியில், திருச்சி நோக்கி ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்த்தால், அந்த கார் எதிரே வந்த கார்கள் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் எதிரே வந்த கார்கள், பின்னால் வந்த கார்கள் என ஏழு கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த சாலை விபத்தில் ஒரு பெண்மணி உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். செல்லும் வழியில் மேலும் இருவர் பலியானார்கள். சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் கீரனூர் காவல்துறையினர் விரைந்து உடல்களை மீட்டும் காயமடைந்தவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிநர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.