பல்லடம் தொகுதியில் 2581 மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி - பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில்அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

பல்லடம் தொகுதியில் 2581 மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி
அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார



திருப்பூர், ஜூலை.22-
திருப்பூர், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம், வீரபாண்டி, கனபதிபாளையம், அருள்புரம், சாமி கவுண்டம்பாளையம், கரடிவாவி ஆகிய மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.  
 விழாவில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 9 பள்ளிகளை சேர்ந்த 2581 மாணவ - மாணவிகளுக்கு  விலையில்லா மடிக்கணினி களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல். ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வரவேற்றார்.
அப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது: 
அம்மா அவர்கள் தான் இந்த மடிக்கணினி திட்டத்தை கொடுத்தவர். கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பள்ளி குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து இந்த அரசு, அம்மா அவர்களின் திட்டங்களை வழங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 24950 பேருக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மடிக்கணினி வழங்கி வர காரணம் அம்மா அவர்கள். பல்லடம் தொகுதிக்கு மட்டும் 4000 மடிக்கணினிகள்,  பல்லடம் தொகுதிக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அம்மா வழியில் இன்று ஆட்சி செய்கிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பள்ளிக்கல்வித்துறையில் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பல திட்டங்களை வழங்கி வருகிறார்கள். 2017, 18 ஆண்டுகளில் படித்த மாணவர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்கப்படும். அம்மா அவர்கள் பள்ளிக்கல்வி துறையில் 16 பொருட்களை கொடுத்து உங்கள் கல்வி மேம்பட வழி செய்த்தை நினைவில் கொள்ள வேண்டும். அதே வழியில் தான் நமது முதல்வரும் செயல்பட்டு வருகிறார். இதை நினைவில் கொண்டு பல்லடம் பகுதி மாணவர்கள் மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவர்களாக உருவாக வேண்டும். இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசும்போது கூறியதாவது: 
இந்த நிகழ்வில் 2581 பேருக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 24,950 மடிக்கணினிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படுகிறது. ஒரு மாவட்டம் முழுவதும் 300 முதல் 400 மாணவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தாலும் அவர்களையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கப்படுகிறது. பெற்றோர்கள் செலவழிக்க இயலாத நிலையில் இருந்தால் கூட கல்வி கற்பிப்பதில் பிரச்சினை ஏதும் இல்லாமல் இருக்கிறது. அரசின் இந்த மடிக்கணினியை பயன்படுத்தி சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என வாழ்த்துகிறேன். என்றார்.
பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் பேசும்போது கூறியதாவது: அம்மா அவர்களின் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருகிற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாசியோடு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. அம்மா அவர்கள் தான் பொறுப்பேற்றது முதல் கடைசி வரை கல்விக்காக ஏராளமான திட்டங்களை தந்தார்கள். அம்மா அவர்கள் காலத்தில் தான் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.  பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்பட்டன. அவர் மறைந்தாலும் கூட இன்று அவர் திட்டங்கள் தொடர்கின்றன. தமிழக முதல்வர் கல்விக்காக 30 ஆயிரம் கோடி ஒதுக்கி தந்து கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். பல்லடம் பகுதியின் நெடுநாள் கோரிக்கையான பல்லடம் கலைக்கல்லூரி அமைத்து பல்வேறு பாடப்பிரிவுகள் துவக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்கள் அனைவரும் மடிக்கணினி மூலம் உங்கள் அறிவை சிறப்பாக வளர்த்து கொள்ள வேண்டும். என்றார்
இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி. ஓ., செண்பக வள்ளி, விழாவில் பல்லடம் மார்க்கெட் சொசைட்டி தலைவர் சித்துராஜ், புலவர் பணிக்கூற்று சங்க தலைவர் ராமமூர்த்தி, சிவாசலம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்ப்பந்தல் நடராஜன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகம்,  முன்னாள் கவுன்சிலர் தர்மலிங்கம், சித்ராதேவி,  கமால்,  பழனிச்சாமி மங்களம் சவுந்தரராஜன், தர்மராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்


 


Previous Post Next Post