திருப்புர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30.07.2019 செவ்வாய் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கு நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் திருப்புர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பத்துடன் வந்து பயன் அடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் (UDID) (Unique ID for Persons with Disabilities) தனித்துவ அடையாள அட்டை மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்திட விண்ணப்பங்கள் பெறப்படும். வருமான வரம்பின்றி முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை எடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.