விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


திருப்புர்  மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  இன்று (26.07.2019) மாதாந்திர விவசாயிகள் குறைடம் தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.



  இக்கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும்
விவசாயிகள் கலந்து கொண்டனர். முந்தைய கூட்டங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக மாவட்ட ஆட்சித்தலைவர் மனுதாரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் கோரிக்கைகளை கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டர். மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றுள்ள 87 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவார் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலார் ஆர்.சுகுமார், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபு, துணை ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணவர்தினி, இணை இயக்குநர் (வேளாண்மை) வளார்மதி, மாவட்ட ஆட்சியரின் நோர்முக உதவியாளார் (வேளாண்மை)ஆனந்தகுமார், துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post