திருப்பூரில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் 






திருப்பூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியில் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில், பொது செயலாளர்  எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில்  காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு பொதுமக்கள்  170 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டை, ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதை எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார். 
 திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அனுப்பர்பாளையத்தில் நடந்த விழாவில், மாநகர் மாவடட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இலவச சேலை, அன்னதானம வழங்கப்பட்டது. இதில் ஈஸ்வரன், கோபால்சாமி, சித்திக், கதர் தங்கராஜ், ரத்தினமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

  கர்மவீரர் காமராஜர் சமூக நலப்பேரவை சார்பில், காமராஜரின் 117 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில், பேரவை தலைவர் ரத்னா ஜெ.மனோகர் தலைமையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு செயலாளர் நெல்லை ராஜா முன்னிலை வகித்தார். வெற்றி செல்வன், தட்சிணா மூர்த்தி, கணேஷ், பத்மநாபன், மணிரத்னம், அலெக்ஸ், தங்கராஜ், தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பகுதியில் காமராஜர் மக்கள் மன்றம் சார்பில், சாவித்திரி ராஜேந்திரன் தலைமையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  தலைவர் ராஜ், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் அய்யம்பெருமாள், கவுரவ தலைவர்கள் மெட்டல் மாதவன், மஞ்சுவேல், சின்னசாமி, அந்தோணி, ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 


 

 




 

 



 



 



 















ReplyForward







Previous Post Next Post