பல்லடத்தில் கொப்பரை கொள்முதல் மையம் துவக்க விழா;  122 பேருக்கு ரூ.2.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்  - அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள்.


தமிழ்நாடு அரசு, கூட்டுறவுத்துறை சார்பில் பல்லடம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் மையம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கால்நடை பராமரப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொப்பரை கொள்முதல் மையத்தை துவக்கி வைத்தும், 122 பயனாளிகளுக்கு 2 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் மற்றும் கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன்,  திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார்,  சங்கங்களின் மாநில பதிவாளர் கோவிந்தராஜ், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய கூடுதல் பதிவாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் சோழவந்தான் செல்லப்பாண்டி வரவேற்று பேசினார். 
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது கூறியதாவது: உழைப்பாளர்கள் நிறைந்த மாவட்டமான திருப்பூருக்கு வந்ததில் பெருமை அடைகிறேன். அம்மாவின் அரசு இந்த மாவட்டத்துக்கு கட்டமைப்பு வசதிகள் நிறைய செய்து தந்து இருக்கிறது.தென்னை விவசாயிகளின் வாழ்வில் வளம் சேர்க்க அரசு கொப்பரை விலையை அதிகரித்து தந்துள்ளது. இந்திய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கொப்பரை விலை எப்போதெல்லாம் குறைகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு கொள்முதல் மையங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு பெற்று கொள்கிறது. அரவை கொப்பரை கடந்த மாதம் வரை 80 ரூபாய் வரை விலை இருந்தது. முதல்வர் அவர்கள் கொப்பரையை கொள்முதல் செய்து கொள்வதாக அறிவித்ததும் விலை அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகளவில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் அரசு இந்த அரசு. 42 ஆயிரம் கோடியை கடனாக வழங்கி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க முதல்வர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். சிறு, குறு விவசாயிகளுக்கு 2100 சங்கங்கள் மூலம் விவசாய கருவிகளை வாங்க வழிவகை செய்தார்கள். அரவை கொப்பறைக்கு 6 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். விவசாயிகள் நேரடியாக பயன்பெற வேண்டும்; இடைத்தரகர்கள் புகுந்து விட கூடாது என அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அம்மா அவர்கள் ஆணையின்படி 1166 கிடங்குகள் கட்டி, விளை பொருட்கள் சேமிக்க பட்டுள்ளது. இன்று 12 லட்சம் டன் விளை பொருட்கள் சேமிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஈட்டுக்கடனும் கொடுத்து விவசாயிகளின் வாழ்வில் வசந்தத்தை தந்தவர் அம்மா அவர்கள் மட்டுமே. எந்த துறை எடுத்தாலும் நல்ல திட்டங்களை தந்து வருவது அம்மா அவர்களின் அரசு. தடையில்லா மின்சாரம் தரும் ஒரே அரசு அம்மா அவர்களின் அரசு; வீட்டுக்கு 100 யூனிட் இலவசம் என அறிவித்ததும் இந்த அரசு தான். ஸ்டாலின் முதல் வீராசாமி வரை கோடீஸ்வரர்கள் கூட மின்சாரம் இலவசமாக வழங்கிய அரசு, அம்மா அவர்களின் அரசு. திமுக எப்போதும் பொய்யான வாக்குறுதியை தான் கொடுப்பார்கள். 5 பவுன் நகைகளை அடகு வைத்திருப்பவர்களின் நகை கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள். இதுவெல்லாம் நிறைவேற்ற முடியாத திட்டம். 
பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எக்ஸன் மேட்டூர் அணை தூர்வாரும் திட்டம் , வண்டல் மண் எடுக்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை வழங்கியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. காமராஜருக்கு அடுத்தாக எளிமையான முதல்வர் நமது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். எந்த நேரத்திலும் அவரை சென்று பார்த்து நீங்கள் குறைகளை தீர்த்து கொள்ளலாம். என்றார்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:    
விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிற தென்னையில் விளையும் கொப்பரைக்கு அதிக விலை கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது இந்த அரசு. கூட்டுறவு துறையில் நடமாடும் காய்கறி கடைகள் திறப்பது உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு கொப்பரை கொள்முதல் மையம் திவங்கப்படுவது, வட்டியில்லா கடன் வழங்கும் நிறுவனம் கூட்டுறவு துறை நிறுவனம் ஆகும். இப்படி விவசாயிகளுக்கு நல்ல திட்டங்கள் வழங்கும் கூட்டுறவு துறை, இன்னும் பல நல்ல திட்டங்களை தொடர்ந்து வழங்க வேண்டும். என்றார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசும்போது கூறியதாவது:  விவசாயிகளுக்கு தமிழக அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நீர் நிலைகளை மேம்படுத்த குடிமராமத்து பணிகள் போன்றவற்றை செய்து வருகிறது. விவசாயிகள் விளை பொருட்கள் சரியான நேரத்தில் விற்க வேண்டும் என்பதற்காக சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுஉள்ளது. கொப்பரை விலை நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகளின் உற்பத்திக்கு சரியான விலை கிடைக்க செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகளுக்கு பயனளிக்க கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. என்றார்.
கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் கு.கோவிந்தராஜ் பேசும்போது கூறியதாவது: தமிழக அரசு விவசாய பெருங்குடி மக்களின் உற்பத்தியை இருமடங்காக உயர்த்தி அவர்களின் வருமானத்தை உயர்த்த வேண்டும் என சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறுத்துறை சார்பில் அனைத்து தரப்பினருக்கும் தேவையான திட்டங்கள் வழங்கப்படுகிறது. கொப்பரை தேங்காய் விலை கிடைக்க வேண்டும், என முதல்வர் அவர்கள் கொப்பரை கொள்முதல் மையங்களை அமைக்க உத்தரவிட்டார். கொப்பரை ஆதார விலை அறிவிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையங்களில் கொள்முதல் செய்யும்போது 6 சதவீதம் கூடுதல் லாபம் கிடைக்கும். நமது மாவட்டத்தில் தென்னை வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. என்றார்.
 பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஏ. சித்தூராஜ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர்பிரபு, துணை பதிவாளர் நர்மதா,  வெங்கடேஷ், ஏ.எம்.ராமமூர்த்தி, சிவாசாலம், ஆறுமுகம், தண்ணீர் பந்தல் நடராஜ், முன்னாள் கவுன்சிலர் தர்மலிங்கம், சித்திராதேவி, கமால், பழனிசாமி, சவுந்தரராஜன், தர்மராஜன், பாரதி செல்வராஜ்  உள்பட பலர் பங்கேற்றனர்.


Previous Post Next Post