தி மனோகரன் அறக்கட்டளை மற்றும் லட்சுமியம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் 2018-19 ம் ஆண்டில் திருப்பூரில் உள்ள 12 அரசு, மாநகராட்சிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிக்கும் விழா பல்லடம் ரோடு, லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது.விழாவுக்கு எவெரெடி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கிரிஸ்டல் வெங்கடாசலபதி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் டி.ஆர்.விஜயகுமார், கோவை ராமகிருஸ்னா கல்லூரியின் தமிழ் துறை தலைவர் என்.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ -மாணவியர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ5000, ரூ3000, ரூ2000, வீதம் ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பொது தேர்வில் 90% மேல் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிற்பதே இவ்விழாவின் நோக்கம் என்று விழா குழுவினர் தெரிவித்தனர்.