அத்திவரதர் வைபவம் தினந்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசனம் நேரம் 2 மணி நேரம் அதிகரிப்பு
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வெளியூர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவண்ணமே இருக்கும் நிலையில் இரவு 10 மணி நேரம் வரை தரிசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிகாலை 4:30 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு 5 மணி முதல் அத்திவரதரை தரிசிக்க தரிசிக்கலாம். பின் இரவு 9:30 மணி வரை கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு 10 மணி வரை பொதுமக்கள் தரிசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்