பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : இன்று முதல் அமல்

 


தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது.


தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.


பிளாஸ்டிக்கை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் முதல் முறை பிடிப்பட்டால் 25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ஒரு லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது.


நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


Previous Post Next Post