திருப்பூர் மாவட்ட போலீசார் ஹெல்மெட் பேரணி

திருப்பூர் , பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்துசாமி தலைமையிலான போலீசார் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர் , இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கயல்விழி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார், முன்னதாக சாமளாபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப் பட்ட கண்காணிப்பு மைய பெட்டியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த கண்கானிப்பாளர் கண்காணிப்பு குறித்த சில விதிமுறைகளை விதித்தார், சாமளாபுரத்தில் துவங்கிய இரு சக்கர வாகன பேரணி காரணம்பேட்டை வழியாக திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே லக்ஷ்மி மில்ஸ், பல்லடம், பொங்கலூர் சென்று பிறகு பல்லடத்தில் நிறைவடையும் நிலையில் சுமார் 30 கிமீட்டர் விரைவில் இரண்டு வரிசையாக போக்குவரத்து விதிமுறைகளுடன் தலைகவசம் அணிந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர், ஆய்வாளர்கள் ரமேஷ் கண்ணன், நிர்மலா, சரவணன், அருள், மற்றும் வனிதாமணி உள்ளிட்ட போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என இப்பேரணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.


Previous Post Next Post