பெரம்பலூர் மாவட்டம்   வேப்பந்தட்டை பகுதியில் தொடரும் மான் வேட்டை; 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.


               வேப்பந்தட்டை தாலுகா கொட்டாரக்குன்னு பகுதியில் அரும்பாவூர் இன்ஸ்பெக்ர் கலா, சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சாக்கு மூட்டையை வைத்துக் கொண்டு சென்றனர். சந்தேகமடைந்த போலீசார் பைக்கை நிறுத்திய போது அவர்கள் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அவர்களை துரத்தி சென்று 2 பேரையும் மடக்கிபிடித்து விசாரித்த போது அவர்கள் கொட்டாரக்குன்னு வை சேர்ந்த அருள் பாண்டி (31)பூமிதானத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (42) என்பது தெரிய வந்தது.

 

                       விசாரணையில் அரும்பாவூர் பெரிய ஏரிப் பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த கிளைமானை நாட்டுதுப்பாக்கியால் சுட்டு பிடித்தது தெரிய வந்தது. பிடி பட்.ட நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கி, பைக், வேட்டையாடிய கிளை மான், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

                இது குறித்து வேப்பந்தட்டை வன அலுவலர் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பறிமுதல் செய்த மான், நாட்டு துப்பாக்கி, பைக், பிடிபட்ட நபர்களையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் வழக்கு பதிந்து தப்பியோடிய ராணுவ வீரர் பூமிதானத்தை சேர்ந்த ரங்கசாமி (36) தேடி வருகின்றனர். வேட்டையாடப்பட்டமானை வேப்பந்தட்டை கால்நடை மருத்துவர் ராமர் பரிசோதனை செய்தார் .          அதனை வனத்துறையினர் வனப்பகுதியில் புதைத்தனர்.

                   மேலும் இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பந்தட்டையை அடுத்த மாவ லிங்கை வனப் பகுதியில்மான் வேட்டையில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் மட்டுமே கைது செய்த நிலையில் ,

இதுவரை 5 பேரில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. 

பட விளக்கம். வேப்பந்தட்டை கொட்டாரக்குன்னு வனப்பகுதியில்மான் வேட்டையில் ஈடுபட்டஅருள் பாண்டி, ஆறுமுகம், பைக், வேட்டையாடப்பட்ட கிளை மான் மற்றும் கைது செய்தவனத்துறையினர் .

 

Previous Post Next Post