விரைவு செய்திகள்

*தமிழ் அஞ்சல் விரைவுச்செய்திகள்


 


*தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடும் நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்?: ஸ்டாலின் கேள்வி*


சென்னை: பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை முனைப்புடன் நிறைவேற்றுமாறு திமுக எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று திமுகவினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வது ஆறுதலாக உள்ளது என தெரிவித்துள்ளார். அதேபோல், தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடும் நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட வேண்டிய அவலநிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் இதெற்கெல்லாம் உரிய பதில் இல்லை என ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


 


*இந்தியா2025க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பேச்சு*


புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 5வது நிதிஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர், இந்தியாவை 2024-க்குள், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவதற்கான இலக்கு சவாலானது, ஆனால் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அடையக் கூடியது தான் எனக் கூறினார். அதேபோல, வருமானம், வேலைவாய்ப்பை உயர்த்த ஏற்றுமதி துறை முக்கியமானது, ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜல்சக்தி துறை அமைச்சகம் தண்ணீர் விவகாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க உதவும் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் ஆயுஷ்மான்பாரத் காப்பீடு திட்டத்தை அனைத்து மாநிலங்களும் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 2025க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறினார்.


 


*திமுக எம்.எல்.ஏ ராதாமணியின் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம்*


விழுப்புரம்: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணியின் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏக்கள் மஸ்தான், மாசிலாமணி பங்கேற்றனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ராதாமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.


 


*அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் : அமைச்சர் உதயகுமார்*


சென்னை : அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெருதெரிவித்துள்ளார். சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.


 


*சுட்டுக்கொல்லப்பட்ட வல்லரசுவின் குடும்பத்தினர், உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை*


#சென்னை : சென்னை மாதவரத்தில் ரவுடி வல்லரசு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து வல்லரசுவின் குடும்பத்தினர், உறவினர்களிடம் பொன்னேரி நீதிமன்ற மாஜிஸ்திரேட் விஜயலக்ஷ்மி விசாரணை நடத்தி வருகிறார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரவுடி வல்லரசுவின் உடலை பார்வையிட்டு மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.


 


*மருத்துவர்களை பாதுகாக்க தனியாக சட்டம் இயற்றுக : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில முதல்வர்களுக்கு கடிதம்*


#டெல்லி : மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். நாடு முழுவதும் வரும் திங்கள் கிழமை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் இவ்வாறு மத்திய அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.


 


*நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து காவல் ஆணையர் பரிசீலனை : நடிகர் விஷால்*


#சென்னை : நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக, காவல் ஆணையர் தெரிவித்தார் என்று நடிகர் விஷால் தகவல் அளித்துள்ளார். அடையாரில் நடிகர் சங்க தேர்தல் நடப்பதால், எந்த வகையிலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படாது என்றும் நடிகர் விஷால் உறுதி அளித்துள்ளார்.


 


*மின்தடையால் நாகை மாவட்ட மக்களுக்கு குடிநீர் சீராக வழங்க இயலவில்லை : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்*


#நாகை : நாகையில் முழுமையாக குடிநீர் கிடைக்காத கிராமங்களுக்கு, டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மேலும் மின்தடையால் நாகை மாவட்ட மக்களுக்கு குடிநீர் சீராக வழங்க இயலவில்லை என்றும் ஓ.எஸ்.மணியன் கூறினார்.


 


*குடிமராமத்து பணியின் கீழ், தூர்வாரி சீரமைக்கப்பட்ட நீர்நிலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட டிடிவி தினகரன் கோரிக்க


#சென்னைகடந்த 2 ஆண்டுகளில் குடிமராமத்து பணியின் கீழ், தூர்வாரி சீரமைக்கப்பட்ட நீர்நிலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை கொண்டு நீர்நிலைகளில் நடைபெறவுள்ள பணிகள் குறித்த பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிடவும் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.


 


*ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதல்வர், துணை முதல்வர் பேசி வருகின்றனர் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி*


#சென்னை : சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய அவர், பருவமழை பெய்யாத காரணத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசி வருகின்றனர் என்றும் வேலுமணி கூறியுள்ளார்.


 


*பெண்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை : எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு*


#சென்னை : பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். மக்களை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் மத்திய மாநில அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என்றும் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.


 


*உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம்; உளவுத்துறை அலர்ட்....*

#மும்பை: மகாராஷ்டிராவில் வெற்றிபெற்ற புதிய எம்.பி.,க்களுடன் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை (ஜூன் 15 ) அயோத்தியில் ராமஜென்மபூமி இடத்தை பார்வையிட செல்கிறார்.


சிவசேனா கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை அயோத்திக்கு செல்கிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.


#*அயோத்தியில் ராமஜென்மபூமியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தலில் வைத்துள்ள ராமர் சிலையை வழிபட உள்ளார் என கட்சியினர் தெரிவித்துள்ளனர். உத்தவ் தாக்கரே மற்றும் அவருடன் வரும் எம்.பி.க்களுக்கு வரவேற்பு அளிக்கப்படும் என உ.பி.,மாநில பா.ஜ., மாநில அரசு தெரிவித்துள்ளது.


இதேபோல உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியாவும் வழிபடுகிறார், மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசின் 81-வது பிறந்த நாள் விழாவும் அயோத்தியில் கொண்டாட விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.


#பயங்கரவாத அபாயம் : இந்த நிலையில் அயோத்தியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. அயோத்தியில் பஸ்கள், ரெயில்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது.


#நேபாளத்தில் இருந்து உத்தர பிரதேசத்தில் ஊடுருவி அயோத்தியில் உள்ள அம்பேத்கர் நகர், பைசாபாத், கோரப்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. உளவுதுறை எச்சரிக்கையை தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


 


*பாட்டி வழியில் பிரியங்கா*


புதுடில்லி : காங்., கட்சி தலைவரான ராகுலின் சகோதரியும், கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார்.


#டில்லியில் உள்ள ராகுலின் வீட்டில், கட்சி தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரியங்கா. கள நிலவரத்தை தெரிந்து கொள்ளவதற்காக "ஜன் தர்பார்" என்ற பெயரில் முன்னாள் பிரதமர் இந்திரா இதே முறையை தான் பின்பற்றி வந்தார்.


 


*வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு எதிராக இப்போதைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.*


 


*கோவை:- ஐ.எஸ். ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.*


 


*அரசியல் வன்முறை மற்றும் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்காளம் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.*


 


*தங்கள் நாட்டு ரெயிலினை இந்திய எல்லைக்குள் செல்ல இந்திய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.*


#சென்னை: கால் பவுன் நகை விலைக்கு நிகராக டேங்கர் லாரி தண்ணீரின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் திண்டாட்டத்திலும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.



*டெல்லி: மருத்துவர்களையும், மருத்துவ துறையை சேர்ந்தவர்களையும் பாதுகாக்க சட்டமன்றத்தில் தனி சட்டம் ஒன்றை இயற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.*



*🌎தமிழ் அஞ்சல்


Previous Post Next Post