சுரண்டை
சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியின் கனிவேலவன் கலையரங்கத்தில் மாணவ மாணவிகள் உபயோகத்திற்காக மின் விசிறிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து அவரது சொந்த நிதியிலிருந்து உபகரணங்கள் வழங்கினர். கல்லூரி முதல்வர் (பொ) வரவேற்று ஜெயா கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக கல்லூரிக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சார்பில் ரூ 2.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், அனுமதி பெற்று தந்துள்ள காம்பவுண்ட் சுவர் பணிகள், 15 க்கும் மேற்ப்பட்ட நிரந்தர பேராசிரியர்கள் பணியிடங்கள், தேவைக்கேற்ப கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள், தனியார் பங்களிப்புடன் கலையரங்கம் கட்ட இயக்குனரின் அனுமதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றி தந்தமைக்கு மாணவர்கள் பேராசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் இன்னும் கல்லூரிக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததாரர்கள் கரையாளனூர் சண்முகவேல், நகர செயலாளர் சக்திவேல், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், ஜெயப்பிரகாசம், ஜவஹர் தங்கம், கீழச்சுரண்டை மாரியப்பன், ராஜேஷ், சிவ சங்கரன், கோபால், குத்தாலிங்கம், பேராசிரியர்கள் பீர்கான், மோகனகண்ணன், ஸ்டீபன் டேவிஸ், நாராயணன், நல்லமுத்து, பராமாத்தலிங்கம், பழனிச்செல்வம், பிரேம் சந்த், என்எஸ்எஸ் மெர்லின் சீலர் சிங், உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போட்டோ
சுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கு உபகரணங்களை சொந்த நிதியிலிருந்து தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கல்லூரி முதல்வர் (பொ) ஜெயாவிடம் வழங்கினார் அருகில் அரசு ஒப்பந்ததாரர்கள் கரையாளனூர் சண்முகவேல் நகர செயலாளர் சக்திவேல்