சுரண்டை
சமீபத்தில் கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது. இதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அகில இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று 17 ம்தேதி காலை முதல் நாளை 18ம்தேதி காலை வரை 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் படி குற்றாலம் கிளை இந்திய மருத்துவ சங்கத்திற்குட்பட்ட நெல்லை மாவட்டத்தின் மருத்துவ நகரமான சுரண்டையில் அனைத்து மருத்துவமனைகளும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவும். மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் செய்து கண்டனத்தை தெரிவித்தன. இருப்பினும் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் விபத்து, அவசர சிகிச்சைகள் வழக்கம் போல செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
போட்டோ
கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவும் கோரி சுரண்டையில் மருத்துவமனைகள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்