2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடபுத்தங்களை வேலூர் மாவட்ட மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் வழங்கினார். இதற்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.2019-20ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடபுத்தங்களை வேலூர் மாவட்ட மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் வழங்கினார். தணிக்கையியல், வேளாண் அறிவியல், அடிப்படை மின்பொறியியல், அடிப்படை இயந்திரவியல், நர்சிங், அலுவலக மேலாண்மை மற்றும் செயலரியல், அடிப்படை தானியங்கி ஊர்த்தி, தட்டச்சு மற்றும் கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம், உள்ளிட்ட 12வகையான தொழிற்கல்வி பாடங்களுக்கான கருத்தியல் மற்றும் செய்முறை பாடங்களுக்கான பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். இதற்காக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் வேலூர் மாவட்ட தலைவர் எம்.வெள்ளியங்கிரி, மாவட்ட செயலாளர் க.ராஜா, மாவட்ட பொருளாளர் எம்.பாண்டுரெங்கன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சண்முகம், மாவட்ட இணை செயலாளர் முனைவர் கே.வி.கிருபானந்தம், வி.பலராமன், உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டோம். மேலும் 25ஆண்டுகள் பணியாற்றிய தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு தொகை வழங்குவதற்கான ஆணையும், அதற்கான அரசின் ஊக்க தொகை வழங்கிடவும் கோரிக்கை வைத்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் உறுதி கூறினார்.இது குறித்து மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…..1978-79ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டில் 780 மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி அறிமுகம் செய்து தொழிற்கல்விக்கென ஆசிரியர் வழிகாட்டி புத்தகங்கள் மட்டுமே அளிக்கப்பட்டது.தமிழகத்தில் 1605 மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பயின்ற சுமார் 1.47 இலட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் 2006-07ஆம் கல்வியாண்டில் மேல்நிலை தொழிற்கல்விக்கான 44 வகையான பாடபுத்தகள் வடிவமைக்கப்பட்டு பாடபுத்தகங்கள் எழுதப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. 2008-09ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் 12ஆக திருத்தியமைக்கப்பட்டு அவற்றில் 9 பாடப்பிரிவுகளுக்கு 2010-11ஆம் கல்வியாண்டில் புதிய பாடபுத்தங்கள் அறிக்கப்பட்டன. 3 பாடப்பிரிவுகளுக்கு 2006-07ஆம் கல்வியாண்டில் வடிவமைக்கப்பட்ட பழைய பாடதிட்டங்களே தொடர்தன.2017-18ஆம் கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு தொழிற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.2019-20ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தணிக்கையியல், வேளாண் அறிவியல், அடிப்படை மின்பொறியியல், அடிப்படை இயந்திரவியல், நர்சிங், அலுவலக மேலாண்மை மற்றும் செயலரியல், அடிப்படை தானியங்கி ஊர்த்தி, தட்டச்சு, நெசவியலும் ஆடை வடிவமைத்தலும், நெசவியல்தொழில்நுட்பம், உணவு மேலாண்மையும் குழந்தை வளர்ப்பும் மற்றும் கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம், ஆகிய 12வகையான தொழிற்கல்விப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடதிட்ட புத்தகங்கள் தமிழகஅரசால் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.