கொல்கத்தா தாக்குதலுக்கு தூத்துக்குடி மருத்துவர் சங்கம் கண்டனம்

தூத்துக்குடி, ஜூன்.17


கல்கத்தாவில் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் வேண்டும் இந்திய மருத்துவ சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட மருத்துவர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் : நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்ததில் இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள மூன்றே முக்கால் லட்சம் உறுப்பினர்கள் பங்கேற்பு.


இந்திய மருத்துவ சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட மருத்துவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க முன்னாள் துணைத்தலைவர் மருத்துவர் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
அண்மையில் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, இளநிலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இதற்கு அகில இந்திய மருத்துவ சங்கமும் ஆதரவு தெரிவித்து நாளை திங்கட்கிழமை பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட மருத்துவர்கள் சங்கமும் அதற்கு ஆதரவு தெரிவித்து நாளை நடைபெறும் 24மணி நேர பொது வேலைநிறுத்ததில் அனைவரும் பங்கேற்பது என்றும் குற்றவாளிகளுக்கு ஜமீனில் வெளிவராத வகையில் கைது செய்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க முன்னாள் துணைத்தலைவர் மருத்துவர் அருள்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய மருத்துவ சங்கம் அகில இந்திய அளவில் நாளை திங்கட்கிழமை 24 மணி நேரம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது என்றார்.
மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் மருத்துவர்கள் அதில் எந்த சந்தேகமும் கிடையாது ஆனால் அந்த மக்கள் மருத்துவர்களை சேவை செய்ய அவர்களுக்கு தகுந்த ஒரு பாதுகாப்போடு செயல்பட்டால் தான் சேவை செய்யமுடியும் என்றார்.
மருத்துவர்கள் மீதான தாக்குதல் இது இன்னைக்கு நேத்து நடக்கல தொடர்ந்து பல காலமாக நடந்துகிட்டு இருக்கு ஆனால் கல்கத்தாவில் கொலை செய்வது போல் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
இதனால் செவிலியர்களோ, மருத்துவர்களோ எப்படி தைரியமாக நோயாளியைப் பார்க்க முடியும் என்றார். பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் வேண்டும் என்றார். நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்ததில் இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள மூன்றே முக்கால் லட்சம் உறுப்பினர்களும் வேலைநிறுத்ததில் பங்குபெறுகிறார்கள் என்றார். ஆனால் அவசர சிகிச்சைகள் எல்லா மருத்துவமனையிலும் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் என்றார்.


 


Previous Post Next Post