இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கூறியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணி என்பது கருத்து சுதந்திரத்தை பேசகூட உரிமை இல்லை குறிப்பாக ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை ,ஸ்டெர்லைட் போன்ற விசயங்கள் குறிப்பிட்ட தக்கது என்றார். 122 நாட்களுக்கு மேலாகியும் காணாமல் போன முகிலன் விசயத்தில் காவல்துறையினர் மெத்தனமாக இருந்து வருகின்றனர்
தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார். இந்திய அரசியலில் வலது சாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றும் முனைப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரச்சாரம் செய்ய போகிறோம். கருத்துரிமை என்ற இயக்கத்தை தூத்துக்குடியில் துவங்க மார்க்சிஸ்ட் திட்டமிட்டுள்ளது என்றார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். கூட்டியக்கமாக செயல்பட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.