பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கு கோறியும், .பாலியல் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
தெலுங்கானா மாநிலத்தில் ஒன்பது மாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு திருப்பூரில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க கோரியும், .பாலியல் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், பாலியல் வன்முறைக்கு நாடு முழுவதும் தனி நீதி மன்றம் அமைக்க வேண்டும், இதுவரை தேங்கிய பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும், பெண்களை ஆபாச பொருளாக காட்டும் திரைகாட்சிகளை தடை செய் தனி சட்டமியற்றி தண்டனை கொடுக்க வேண்டும், .ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும், விசாகா தீர்ப்பின்படி மனரீதியான பாலியல் வன்கொடுமையையும் குற்றசெயலாக கருதி இந்திய தண்டனை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 300 க்கும்.மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்