தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு ஆதரவாக மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் நடிகர் உதயா,நடிகர் விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகியோரும் ஆதரவு கேட்டு வருகிறார்கள். நடிகர் உதயா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்கள் கூறியது:
சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக போட்டியிடும் தலைவர் பாக்யராஜ் யாருக்கு ஆதரவாக இன்று மதுரை நாடக சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம், மதுரை உள்ள கலைஞர்களின் திறமையை கண்டு நான் வியந்து இருக்கிறேன், எந்த வித கலை நிகழ்ச்சியின் செய்யாமல் 8 மாதத்துக்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என தலைவர் தெரிவித்திருக்கிறார், மதுரையில் முதியோர் திட்டம் செயல்படுத்த இருக்கிறோம், அதேபோல் அரசின் திட்டம் 5 கிலோ அரிசியை வழங்க இருக்கிறோம், நடிகர் மத்தியில் நலிந்த என்ற வார்த்தையை இருக்கக் கூடாது, கருணாஸ் நிறைய சொல்லுவாங்க அது எதுவுமே உண்மை இல்லை, 1.5கோடி கொடுத்தது வட்டியில்லா கடன் அதை எப்படி வட்டிக்கு கொடுத்ததாக கூற முடியும், இது ஒரு கலைஞர்களின் குடும்பம். தேர்தல் என்பது போட்டிதான். அணியை சேர்ந்தவர்கள் அரசியலில் இருக்கலாம், ஆனால் அணி எப்படி அரசியலாகும். கருணாஸ் பதவி கேட்டதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளது அதனை தேவைப்பட்டால் வெளியிடுவேன், எதிர்க்கட்சி ஆளுங்கட்சி மற்ற தரப்பினர் தரப்பு நடிகர் சங்கத்தில் தலையீடு இல்லை. நாடக கலைக்கு உரிய மரியாதை கொடுத்தே சுவாமி சங்கரதாஸ் அணியினர் என்றே பெயர் வைத்தோம், விஷால் என்னுடைய தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை எனவும், விஷால் அரசியல் தலையீடு பிடிக்கவில்லை எனவும், நாசர் உண்மையை சொல்லியிருக்கிறார், கட்டிடம் விஷால் மட்டும் கட்டவில்லை, எல்லா கலைஞர்களும் இணைந்தே கட்டிடடப்பணியை மேற்கொண்டார்கள், கருணாஸ் பேச்சுத்திறமை அருமை, அவர் பேச்சை கேட்டு கலைஞர்கள் மனம் மாறி விடமாட்டார்கள், பாண்டவர் அணியினர் பொய் மட்டுமே கூறுகின்றார். கருணாஸ் பதவி கேட்டார். உண்மையாய் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி என்று சொன்னாதால் அவர் கோபப்பட்டு பேசி வருகிறார்,