ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
3 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 6 வாகனங்களில் சு.குணசேகரன் எம்.எல்.ஏ., அனுப்பி வைத்தார்
May 4, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்

3 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 6 வாகனங்களில் சு.குணசேகரன் எம்.எல்.ஏ., அனுப்பி வைத்தார்



கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு நிவாரணமாக, திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட 21 வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.85 லட்சம்  மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் இரண்டு கட்டங்களாக அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில், 3 வது கட்டமாக மேலும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பும் நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் கலந்துகொண்டு, ரூ.20 லட்சம் மதிப்பில்   3 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். இந்த நிவாரண தொகுப்புஒவ்வொன்றிலும், அரிசி, 16 வகை மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய பைகள் பேக்கிங் செய்யப்பட்டு, 6 லாரிகளில் ஏற்றி வார்டு முழுவதும் அனுப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் வி.ஜி.வி.பாலு, செல்வி பாலசுந்தரம், கணேஷ், மற்றும் பன்னீர்செல்வம், கண்ணுசாமி, வெ.அ.கண்ணப்பன், சென்னிமலைபாளையம் ரமேஷ், ஜோஷி உள்பட பலர் பங்கேற்றனர்.