ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
மயிலாடுதுறை குதம்பைச் சித்தருக்கு தை  விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு
January 19, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்

 

 மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயிலில் ஜீவசமாதி கொண்டு  அருளும் குதம்பை சித்தருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி குதம்பை சித்தர்  தை விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குதம்பைச் சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் விழாவில் மயூரநாதர் திருக்கோயிலில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன்  செய்திருந்தார்