ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
பாசார் ஊராட்சியில்  தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு.
April 16, 2020 • திட்டக்குடி செல்வேந்திரன் • மாவட்ட செய்திகள்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா வேப்பூர்  அருகிலுள்ள பாசார்  ஊராட்சியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
 
 
உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவிவரும் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாசார் ஊராட்சியில்  பரவலை தடுக்க வேப்பூர் தீயணைப்பு வாகனம் மூலம்   கடை பகுதிகள், பேருந்து நிலையம், கோவில் பகுதி, அரசு அலுவலகங்கள் மற்றும் வீடு, தெருக்களில் ஊராட்சிமன்ற தலைவர் விஜயாதங்கப்பன் தலைமையில்    தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சதாசிவம் முன்னிலையில் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி மேற்கொண்டனர்.
 
அதனைத்தொடர்ந்து அங்குள்ள துப்புரவு பணியாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார். இதில் துணைதலைவர் லெட்சுமி கருப்பையா  , செயலர் மாயவன், தீயணைப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் வார்டு உறுப்பினர்கள் பழனியம்மாள் பெரியசாமி, தேவகி காமராஜ், துரைசாமி,  இளங்கோவன்,நசிமா, அலுவலக உதவியாளர் தர்மா, டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் தீயனைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள்  ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தீயணைப்பு வீரர்களூக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.