ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
பல்லாவரம் பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம்
May 3, 2020 • பல்லாவரம் கயூம்பாட்ஷா • மாவட்ட செய்திகள்
தாம்பரம், பல்லாவரம் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி தலைமையில் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
 
 
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் முன்னாள் தென்சென்னை எம்.பி.யும், அதிமுக காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் உத்தரவின்பேரில் செம்பாக்கம் நகராட்சி, தாம்பரம் நகராட்சி, பொழிச்சலூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள 5000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகிய நிவாரண பொருட்களை வழங்கிவருகின்றன. 
 
இதன் ஒரு பகுதியான செம்பாக்கம், தாம்பரம் மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் முக கவசம் அணிவித்து தனிமனித இடைவெளி வெளிவிட்டு  நிற்கவைத்து வேட்டி, சேலை, மளிகை பொருட்கள், அரிசி, காய்கறி ஆகியவற்றை கொடுத்து கௌரவித்தனர். மேலும் அப்பகுதியில் இன்று ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.