ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
நெய்வாநத்தம் ஊராட்சியில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள்
May 3, 2020 • தி.மலை வேல்முருகன் • மாவட்ட செய்திகள்

நெய்வாநத்தம் ஊராட்சியில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் வழங்கினார்.



திருவண்ணாமலை மே 3 - நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையட்டி பள்ளி, கல்லூரிகள், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முடப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெய்வாநத்தம் ஊராட்சியில் உள்ள ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், தச்சு வேலை செய்பவர்கள், குயவர்கள் மற்றும் ஆதிதிராவிடர் குடும்பங்களைச் சார்ந்த 150 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பருப்பு வெங்காயம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பழனிமலை ஆச்சாரி அஞ்சலை குடும்பத்தினர் மற்றும் முருகர் கோயிலைச் சார்ந்த அர்ச்சகர் அன்பழகன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வேட்டவலம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் டி.சிவசங்கரன் முன்னிலை வகிக்க திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் டி.செந்தில்குமரன் தலைமையேற்று 150 குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார் அப்போது அனைவரும் சமுக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிகழ்வில் முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் வரத ராமாநுஜம் வேட்டவலம் முன்னாள் கவுன்சிலர் முருகன் முன்னாள் துணைத் தலைவர் இளவரசன் சென்னை ரவி சசிகுமார் வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணன் தனபால் மரகதம் ரவி மற்றும் பிரபு குணசேகரன் கந்தசாமி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.