ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
நல்லவன்பாளையம் ஊராட்சியில் 100 பேருக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள்
May 4, 2020 • திருவண்ணாமலை வேல்முருகன் • மாவட்ட செய்திகள்

நல்லவன்பாளையம் ஊராட்சியில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் தூய்மை பணியாளர்கள் - டேங்க் ஆப்பரேட்டர்கள் 100 பேருக்கு  அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் ஏ.கே.ஆர்.கதிரவன் வழங்கினார்.



திருவண்ணாமலை மே 4 - நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முடப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுத்தியுள்ளது.

இந்த 144 தடை உத்தரவால் பொது மக்கள், கூலி தொழிலாளிகள் அனைவரும் பெரும் சிரமத்தில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆணைக்கிணங்க தற்போது கழக நிர்வாகிகள் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

திருவண்ணாமலை ஒன்றியம் நல்லவன்பாளையம் ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு சாரா அணி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மண்டல பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.ஜி.பார்த்திபன் அறிவுறுத்தலின் பேரில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் ஏ.கே.ஆர்.கதிரவன் தூய்மைப் பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு கையுறை முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியதோடு பாதுகாப்புடன் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்து தூய்மைப் பணியாளர்கள் நிவாரண பொருட்களை வாங்கிச்சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மேற்கு ஓன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், கிழக்கு ஓன்றிய செயலாளர் மகேஸ்வர ராஜா, மாவட்ட பொருளாளர் ஜி.இ.அன்புமணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வி.எஸ்.ஆர்.விஜய்ஆனந்த், மாவட்ட மகளீர் அணி செயலாளர் ராஜலட்சுமி, நல்லவன்பாளையம் ஊராட்சி செயலாளர் கோதண்டம் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.