ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களுடன் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம்வழங்க ரூ 10000, -அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்
April 16, 2020 • கோபி மாரிச்சாமி • மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக  தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு,  அரிசி,மளிகை பொருட்கள்,  காய்கறிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு  முக கவசம், கபசுர சூரணம்,  போன்றவற்றை வழங்கும் பணிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

மேலும் நடமாடும் காய்கறி வாகனத்தின் விற்பனையையும் துவக்கி வைத்தார் வைத்து,  அன்னதானம் வழங்குவதற்கு ரூபாய் 10000 நிதியையும்  வழங்கினார். இதில் தாசில்தார் வெங்கடேஸ்வரன், யூனியன் சேர்மன் சுப்பிரமணியம், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற தலைவர் கே.எம். மகுடேஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்.ஆர் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிவகாமி, கருப்புசாமி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்