ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
தி.மலை கூட்டுறவு மருந்து கடையில் 15 சதவிதம் தள்ளுபடியில் விற்பனை
May 3, 2020 • தி.மலை வேல்முருகன் • மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை கூட்டுறவு கடைகளில் 15 சதவித தள்ளுபடி விலையில் அனைத்து வித மருந்துகளும் கிடைக்கும் என வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் பி.சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் மற்றும் தேரடி வீதியிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சொந்தமான மருந்து கடைகளில் 15 சதவிதம் சிறப்பு தள்ளுபடி விலையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது பொதுமக்கள் கேட்கும் மருந்துகள் இருப்பு இல்லைஎன்றால் 12 மணிநேரத்தில் வரவழைத்து வழங்கப்படுகிறது

மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தானியங்களின் பயிரில் மகசூல் ஈட்டுவதற்கு உதவியாக ரூ. 1லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. தானியங்களை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய 5குடோன்கள் உள்ளன. திருவண்ணாமலை முதல் கீழ்பென்னாத்தூர் வரை உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதலாக குறைந்தவட்டியில் நபர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 லடசம் வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவையான களப்பை, கடப்பாறை, மண்வெட்டி அலுமினிய கேன் இரும்பு தகட்டில் செய்யப்பட்ட கொப்பரை பால்கேன் வீடுகட்ட தரமான கம்பிகள் அரசு சிமெண்ட் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.

சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுவதால் விவசாயிகள் பொதுமக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம் என வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவ விற்பனை சங்க தலைவர் பி.சுனில்குமார் தெரிவித்துள்ளார்.