ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
திருப்பூரில் 562 துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அரிசி மற்ரும் மளிகைப் பொருட்கள்
April 10, 2020 • தமிழ் அஞ்சல்

திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட, மாநகராட்சி 2 வது மண்டல பகுதிகளில் பணிபுரியும் 562 துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, மாஸ்க், அரிசி மற்ரும் மளிகைப் பொருட்களை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., வுமான கே.என்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில்  உதவி கமிஷனர் வாசுக்குமார், முன்னாள் மண்டல தலைவர் ஜெ.ஆர்.ஜான், சுகாதார அலுவலர் முருகன்,  கோட்டா பாலு, சங்கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.