ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
தமிழ்நாட்டில் கொரோனா ருத்ரதாண்டவம்: ஒரே நாளில் 527 பேருக்கு பாதிப்பு
May 4, 2020 • தமிழ் அஞ்சல் • தமிழகம்

கொரோனா பரவலுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாக தினமும் 200க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 122 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் ஆண்கள் 377 பேர், பெண்கள் 150 பேர். சென்னையில் மட்டும் 266 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 49 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்து உள்ளது.

படம்: தூத்துக்குடியில் பனைமட்டை முகமூடி அணிந்த நபர்.

--------------------------------------------------------------------------------------------------

இன்று ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், கொரோனாவால் தமிழகத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. 

கோயம்பேடு மார்க்கெட் தொடர்பில் தான் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. 

இன்று ஒரே நாளில் 12,863 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 

கொரோனா பரவல் தீவிரம் அதிகம் ஆகும் நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மாஸ்க் அனிவதையும், உங்கள் எதிரில் அல்லது அருகில் உள்ளவர்கள் மாஸ்க் அணிவதையும் உறுதி செய்யுங்கள்.