ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
கோபி இந்திராநகர் பகுதியில் தி.மு.க சார்பில் ஆதி திராவிட மக்களுக்கு காய்கறிகள், நிவாரண பொருட்கள் 
May 3, 2020 • கோபி மாரிச்சாமி • மாவட்ட செய்திகள்
 
ஈரோடு மாவட்டம் கோபி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் ஒன்றியம்  கொங்கர்பாளையம் ஊராட்சி இந்திராநகர் ஆதிதிராவிட குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக  திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம்  அறிவுறுத்தலின் படி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டி.கே. சுப்ரமணியம்  முன்னிலையில் டி. என். பாளையம் ஒன்றிய செயலாளர் எம். சிவபாலன் ஏற்பாட்டில் காய்கறிகள் வழங்கப்பட்டது.இதில் கொங்கர்பாளையம் ஊராட்சி கழக செயலாளர் ஜம்பு(எ)கே.கே.சண்முகம், யூனியன் கவுன்சிலர் பி.ஆசீர்வாதம், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட துறையம்பாளையம், உப்புப்பள்ளம்,அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஆதி திராவிட மக்களுக்கு காய்கறிகள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.