ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்டக் கிளையின் சார்பில் 45 ஏழை  குடும்பங்களுக்கு, ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள்
May 3, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்டக் கிளையின் சார்பில், தேனி எம் ஜி ஆர் நகர், சமதர்ம புரம், பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெரு, ஆகிய பகுதிகளில் இருக்கின்ற 45 ஏழை  குடும்பங்களுக்கு, ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. ஐ ஆர் சி எஸ் இன் சேர்மன் டாக்டர் ஆர். தியாகராஜன், செயலாளர் சுருளிவேல் ஆகியோர் பொருட்களை வழங்கினர்.
 
ஐ ஆர் சி எஸ்ஸின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மகாராஜன், முகமது பாட்சா, வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் நிர்வாகி போடி பொறியாளர் செந்தில் குமரன், ஜே ஆர் சி எஸ் சி யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தாழைக்குமரன், பார்த்திபன், சமூக நல்லிணக்க பேரவை யின் ஒருங்கிணைப்பாளர் முகமது சபி, அபுதாஹீர் ராஜா ஆகியோர் கலந்து மேற்கண்ட நிகழ்வில் கொண்டனர்.