ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
அம்பேத்கர் பிறந்தநாள்: திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் மரியாதை
April 14, 2020 • தமிழ் அஞ்சல் சேகர் • மாவட்ட செய்திகள்

டாக்டர். அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு முத்துசாமி தலைமையில் திமுகவினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

முன்னாள் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார்  அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு  தெற்கு மாவட்ட திமுக சார்பில்  அண்ணல் அம்பேத்காரின் பிறந்த தினத்தையொட்டி  ஈரோடு மணல்மேட்டில் உள்ள ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஈரோடு மணல் மேட்டில் அண்ணல் டாக்டர் அம்பேத்காரின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சரும் . தெற்கு மாவட்ட கழக செயலாளர் சு. முத்துசாமி உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .